மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டம் திருப்பரங்குன்றம் வட்டத்திற்கு உட்பட்ட திருநகர் பகுதியில் செயல்படும் UVS ELECTROPATHY MEDICAL COLLEGE AND HOSPITAL என்ற கல்வி பயிற்சி நிறுவனமானது தமிழக அரசின் அனுமதிபெறாமல் செயல்படுவதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து மூடி சீல் வைக்கப்படுள்ளது.கடந்த 14.04.2020 அன்று UVS ELECTROPATHY MEDICAL COLLEGE AND HOSPITAL என்ற கல்வி நிறுவனமானது தமிழக அரசின் அனுமதி பெறமால் செயல்படுவதை இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகம் கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் மூலம் இந்த கல்வி நிறுவனத்தினை மூடுமாறு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது அதன் அடிப்படையில் கடிதம் கிடைக்கப்பெற்ற 7 தினங்களுக்குள் கல்வி நிறுவனத்தினை மூடிட உத்திரவிடப்பட்டிருந்தது . ஆனால் உயர்நீதிமன்ற உத்திரவினை மீறுகின்ற வகையில் UVS ELECTROPATHY MEDICAL COLLEGE AND HOSPITAL கல்வி நிறுவனமானது தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் மருத்துவ ஸ்தாபன சட்டம் 1997 விதி 2018 ( CEA – 1997 ) – ன் படி அரசிடமிருந்து அனுமதி ஏதும் பெறப்படாத நிலையில் UVS ELECTROPATHY MEDICAL COLLEGE AND HOSPITAL என்ற கல்வி நிறுவனம் இயங்குவதால் திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா தலைமையில் அதிகாரிகள் நன்று நிறுவனத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினரை வெளியே அனுப்பிவிட்டு இந்த கல்வி நிலையத்தை மூடி சீல் வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.