Home செய்திகள் நிலக்கோட்டை அருகே தனியார் செண்டு தொழிற்சாலையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை.

நிலக்கோட்டை அருகே தனியார் செண்டு தொழிற்சாலையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை.

by mohan

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபாஸ் ஜெயின் என்பவரின் வீட்டில் பல மாநிலங்களில் உள்ள உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளார்கள். அப்படி நடந்த சோதனையில் பல ஆயிரக்கணக்கான நகைகள், பணம் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இவரது உறவினரான பங்காஸ் ஜெயின் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் நிலக்கோட்டை – வத்தலகுண்டு சாலையில் தீயணைப்பு துறை நிலையம் அருகேதனியார் பூக்கள் வாசனை திரவிய தொழிற்சாலையில் இருக்கிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் மும்பை மற்றும் சென்னை , மதுரை உள்ளிட்ட மண்டல வருமான துறை அதிகாரிகள் திடீரென வந்த அதிகாரிகள் தொழிற்சாலைகளை அனைத்து கதவுகளை பூட்டு போட்டு பூட்டினர். பின்னர் ஒவ்வொரு அறையாக சோதனை செய்யத் தொடங்கினார்கள். சுமார் 1/2 மணி நேரம் சோதனைக்கு பின்பு தொழிற்சாலையில் இருந்த சில ஆவணங்களை ஒரு காரில் கைப்பற்றிக் கொண்டு அங்கிருந்து வந்த ஒரு சில அதிகாரிகள் ஒரு காரில் சுமார் 9.30 மணி அளவில் ஒரு காரில் ஏறி ஆவணங்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டனர். இந்நிலையில் இச்சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது. இதனைத் தொடர்ந்து தற்போது வரை ஒவ்வொரு அறையாக துருவித்துருவி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதனை அறிந்த நிலக்கோட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் , பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்கள் உட்பட அந்த தொழிற்சாலைகள் முன்பு நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.படவிளக்கம்: நிலக்கோட்டை அருகே வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்திய தொழிற்சாலையை படத்தில் காணலாம்.படவிளக்கம் 2: தனியார் தொழிற்சாலையில் இருந்த காரை வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!