நிலக்கோட்டையில் 13-ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய 13-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் கோட்டைச்சாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த வருடம் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து 13-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவியை காலி இடமாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிப்பு செய்து தற்சமயம் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியின் வேட்பாளராக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய இணைச் செயலாளராக பணியாற்றி வரும் உதயகுமார் அறிவிக்கப்பட்டு தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கிருஷ்ணனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நிலக்கோட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், முன்னாள் எம்பி உதயகுமார் உள்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..