அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரங்கள்.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில், ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரங்களை அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிசன் தயாரிக்கும் இயந்திரத்தை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் அவர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், ஆகியோர் துவக்கி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்