Home செய்திகள் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழகத்தில் முதல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுகூட்டுறவுத் துறை அமைச்சர் பெருமிதம்.

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழகத்தில் முதல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுகூட்டுறவுத் துறை அமைச்சர் பெருமிதம்.

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக தமிழக முதலமைச்சரின் சீரிய திட்டமான மக்களை தேடி மருத்துவம் என்ற நிகழ்ச்சி ஆத்தூர்  சட்டமன்ற உறுப்பினரும், தமிழகத்தின் கூட்டுறவுத் துறை அமைச்சருமான இ. பெரியசாமி தலைமையில் மக்களை தேடி மருத்துவம் என்றார் நிலையில் அம்மையநாயக்கனூர், இடையபட்டி உள்ளிட்ட  பகுதிகளில் சென்று வீடு வீடாக சென்று சர்க்கரை நோயாளிகளுக்கும், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளை வழங்கினார்கள். இந்த மருத்துவ நிகழ்ச்சியில் முன்னதாக தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் இ. பெரியசாமி பேசியதாவது: தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் நிரப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் சீரிய பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செய்யாத மக்களை தேடி மருத்துவம் என்ற உன்னதமான திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இன்றைக்கு இப்போது இந்த சிறிய கிராமத்தில் தொடங்கிவைத்த பெருமை தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாரும். இது போன்ற எண்ணற்ற திட்டங்களை மிக விரைவாக தமிழக அரசு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பேசினார். பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் திமுக நாகராஜ், மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் நளினி , நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி அம்மையநாயன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி அம்மையநாயக்கனூர் வட்டார மருத்துவ மனை டாக்டர் வினோத், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் உட்பட 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சமூக இடைவெளி என்பது கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அப்பகுதி பொதுமக்கள் வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படவிளக்கம் நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூர் என்ற கிராமத்தில் வீடு வீடாகச் சென்று தமிழக  கூட்டுறவுத்துறை அமைச்சர் இ பெரியசாமி பொதுமக்களுக்கு மருந்து வழங்கிய போது எடுத்த படம்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com