56
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள நாகையை கவுண்டன் பட்டியைச் சேர்ந்த சந்தானம் மகன் கருப்பண்ண ஆசாரி ( வயது 72.) இவர் மதுரை சாலையில் உள்ள சண்முகநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 120 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதுகுறித்து வந்த தகவலை ஒட்டி நிலக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தை சேர்ந்த நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் குழுவினர்கள் விரைந்து வந்து கிணற்றில் தவறி விழுந்த 72 வயது கருப்பான ஆசாரியை உயிருடன் மீட்டனர். தகவல் வந்தவுடன் சிறப்பாக பணிபுரிந்து 72 வயது முதியவரை காப்பாற்றிய நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரிகளை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.