திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்த காந்தியா பிள்ளை மனைவி அமராவதி வயது 72. இவரது கணவர் காந்தியா பிள்ளை வணிகவரித் துறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றபின்னர் காலமாகிவிட்டார். தற்போது அமராவதி கிழக்குத் தெருவில் ஆட்கள் நடந்து செல்லும் அளவில் உள்ள சந்து குடியிருப்பில் தனது சொந்த வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார். இவர் நேற்று 26.02.2021 மதியம் வீட்டில் இருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவர் அமராவதியின் வாயை பொத்திக்கொண்டு கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையையும் கையில் அணிந்திருந்த 2 1/2 பவுன் தங்க வலைகளையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். இதன் பின்னர் அமராவதி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்க்கையில் மர்ம ஆசாமி தப்பி சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரனிடம் அமராவதி கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் வாகனங்கள் செல்ல முடியாத ஆட்கள் நடந்து செல்லக்கூடிய ஒரு சந்து குடியிருப்பில் வசிக்கும் மூதாட்டியிடம் இருந்து 7 பவுன் செயினை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.படவிளக்கம்: நகையை பறிகொடுத்த அமராவதி படத்தில் காணலாம்
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.