சிலுக்குவார்பட்டியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிலுக்குவார்பட்டி ஊராட்சி ஆர். சி. மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழிசேகர் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத்துணைத்தலைவர் யாகப்பன், முன்னாள் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மன்ற தலைவர் தண்டபாணி , முன்னாள் நிலக்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் சேகர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் எலிசபெத்ஸ்டெல்லாபேமல் வரவேற்று பேசினார். விழாவில் பள்ளி மாணவ,மாணவிகள் 113 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழிசேகர் பேசியதாவது: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் பள்ளி மாணவ , மாணவிகளுக்கு பல்வேறு வகையில் நலத்திட்டங்களை வழங்கிதை தொடர்ந்து ,இன்றைக்கும் தமிழகத்தின் முதல் அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அத்தனை திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறார். அந்த வகையில் அ.தி.மு.க அரசு தான் இந்தியாவிலேயே மாணவ, மாணவிகளின் நலனில் அதிக அளவு அக்கறை எடுத்து கல்வித்தரத்தை மேம்படுத்த சிறப்பான வகையில் செயல்பட்டு வருகிறது என்பதை பெருமிதமாக பேசினார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி,மாவட்ட பிரதிநிதி சேசுராஜ், சிலுக்குவார்பட்டி தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கதலைவர் ஜோசப், பள்ளி உதவிதலைமை ஆசிரியர் ஜெயசீலன், உடற்கல்வி ஆசிரியர் விக்டர்ஜேம்ஸ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா