Home செய்திகள் நிலக்கோட்டை பகுதியில் ஊதா நிற செவ்வந்திப் பூக்கள் சாகுபடி

நிலக்கோட்டை பகுதியில் ஊதா நிற செவ்வந்திப் பூக்கள் சாகுபடி

by mohan

திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது நிலக்கோட்டை பூக்கள் தான். ஏனென்றால் நிலக்கோட்டை பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலக்கோட்டை பகுதியில் உடைய தட்பவெட்பநிலை மற்றும் வறண்ட குறைந்த தண்ணீரைக் கொண்ட பூமியாகவும் செம்மண் பூமி அதிகமாக கொண்டிருப்பதாலும் இங்கு வாழும் விவசாயிகள் பெரும்பாலும் அனைத்து வகையான பூக்களையே சாகுபடி செய்து வருகின்றனர். அவ்வாறு சாகுபடி செய்த பூக்களில் அதிகமான நறுமணமும் அதேசமயம் தரமான பூக்களாக இருப்பதாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி மார்க்கெட்டிலும், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு ஒரு கிராக்கி பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அப்படி பேசப்பட்ட பூக்களை நிலை குறித்து சினிமா பாடல் படம் சிந்துநதிப் பூவே என்ற சினிமா படத்தில் நிலக்கோட்டை பூ எடுத்து நான் ஜடை போட்டு பாக்க போறேன் என்ற மிகப்பெரிய அளவில் அதனால் அளவுக்கு பாடல்களை கவிதை கவிஞர்களின் மனதில் மல்லிகைப் பூவும், மற்றப் பூக்களும் கவிஞர் மனதில் அவ்வப்போது சிறப்பு பெற்றது நிலக்கோட்டை பூ மார்க்கெட் பூக்கள். அப்படிப்பட்ட இயற்கையாக நாம் பார்த்ததெல்லாம் மஞ்சள் நிற செவ்வந்தி பூக்கள் அதிகளவு சாகுபடி செய்து பார்த்து வந்தோம். ஆனால் தற்போது நவீன காலத்தில் ஊதா நிற செவ்வந்தி பூக்களையும் விவசாயிகள் தற்போது சாகுபடி செய்து வருகிறார்கள். நிலக்கோட்டை பகுதிகளில் உள்ள மிளகாய்பட்டி, ஆண்டிபட்டி, சீத்தாபுரம், காமாட்சிபுரம், தம்பிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் அதிதீவிரமாக ஊதா நிற பூ செவ்வந்தி பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூக்கள் தற்போது நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து நாடு முழுக்க ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கிலோ 90 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் பொதுமக்கள் மத்தியிலும், வியாபாரிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!