சுரண்டையில் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி-அனைத்து திருச்சபைகள் பங்கேற்பு…

தென்காசி மாவட்டம் சுரண்டையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒருங்கிணைந்த கிறிஸ்துமஸ் கீத ஆராதனை சிறப்பு நிகழ்ச்சி சீயோன் வளாகத்தில் நடந்தது. ஆராதணை நிகழ்விற்கு வடக்கு சபை மன்ற தலைவர் ரெவ வில்சன் சாலமோன் ராஜ் தலைமை வகித்து கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தியளித்தார். ஏஜி சபை தலைமை போதகர் அருள்ராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். சுரண்டை சீயோன் சேகர தலைவர் ரெவ ஆல்வின் பிரைட் வரவேற்று பேசினார்.சுரண்டை ஏஜி, சிஎஸ்ஐ புதுச்சுரண்டை, சீயோன், கடையாலுருட்டி, ஆலடிப்பட்டி, குலையநேரி, இமீனாட்சிபுரம், சின்னத்தம்பி நாடாரூர், ஆனைகுளம், இரட்டைகுளம் சபைகளை சேர்ந்த இறைமக்கள் பங்கு பெற்று கிறிஸ்து பிறப்பின் பாடல்களை பாடினர். நிகழ்ச்சியில் பாஸ்டர்கள் ஜெயகுமார், நோவா பால், ஏஎஸ்ஏஆர் பாலச்சந்திரன், அன்னப்பிரகாசம், ஜேக்கப், அருமை நாயகம், ஸ்டீபன், சொக்கையா, சுவீகர், தனபால் ராஜசேகர்,  ஸ்டீபன் ஜெபராஜா, ராஜகுமார், ஜேம்ஸ், ரூஸ்வெல்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.‌ முடிவில் புதுச்சுரண்டை சேகர குரு டிகே ஸ்டீபன் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்