Home செய்திகள் பூக்களின் வரத்து குறைந்ததால் உச்சம் தொட்ட மதுரை மல்லிகை பூவின் விலை

பூக்களின் வரத்து குறைந்ததால் உச்சம் தொட்ட மதுரை மல்லிகை பூவின் விலை

by mohan

மதுரை மலர் சந்தையில் பூக்களின் வரத்து பெருமளவு குறைந்த காரணத்தால் மதுரை மல்லிகை விலை கிலோ ரூபாய் 2000 என உச்சத்தை தொட்டது.மதுரை மலர் சந்தை மதுரை மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களின் பூ உற்பத்தியாளர்களின் சரணாலயமாகும். மதுரை ராமநாதபுரம் தேனி திண்டுக்கல் விருதுநகர் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பூக்கள் வரத்து இங்கு இருக்கும்.இந்நிலையில் இன்று மதுரை மலர் சந்தைக்குப் போக்குவரத்து பெருமளவு குறைந்த காரணத்தால், மதுரை மல்லி கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரளி ரூ.300, பிச்சிப்பூ ரூ.700, முல்லை ரூ.700, சம்பங்கி ரூ.120, செவ்வந்தி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.120, பட்ரோஸ் ரூ.100 என பூக்களின் விலை உயர்வு.பூக்கள் வரத்து மிக குறைவாக இருக்கின்ற காரணத்தால் அடுத்த சில நாட்களுக்கு இதே விலை நிலவரம் நீடிக்கும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com