சுயசரிதை எழுவேன் – அதனால் பல பிரச்சனைகள் பலருக்கு எழும் என முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி.!!

மதுரையில் ஹிந்து ஜனநாயக ப்ராண்ட் அமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.முன்னதாக செய்தியாளர்களிடம் ராம மோகனராவ் பேசுகையில்,தமிழகத்தில் கோவில்களை நம்பி பத்து லட்சம் குடும்பங்கள் உள்ளதாகவும், கோவில் பொருளாதாரத்தை நம்பி இக் குடும்பங்கள் உள்ளன. வறுமைக்கோட்டிள்கு கீழ் மிகவும் அரசின் எந்த உதவியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர், அவர்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை,மாத உதவித்தொகை கிடைக்க அரசிடம் வலியுறுத்துவேன் எனவும்,ஜெயலலிதா மரண விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் கருத்து தெரிவிக்க இயலாது,நாம் சமுதாய இயக்கமாக கலாச்சார இயக்கத்தையே நடத்துகிறேன். நான் சமுதாய பணியை மட்டுமே செய்கிறேன்,தமிழகத்தில் 42 சதவிகித சமுதயங்கள் அரசியலில் முன்னேறுவதற்கு வழிகாட்டுகிறேன். அரசியல் தொடர்பே இல்லாமல் அவர்கள் உள்ளனர்,தமிழக அரசு 2500 ரூபாய் பொங்கல் பரிசு கொடுப்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை,வாக்கு இயந்திரங்கள் சரியாக உள்ளன. வாக்கு இயந்திரங்கள் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,என் சுயசரிதை எழுதுவேன். அது பலருக்கு பிரச்சனையை உருவாக்கும். இப்போது எல்லாமே தவறாக பேசுகிறார்கள் இதை நகைச்சுவையாகத்தான் சொன்னேன் எனக்கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்