திருமங்கலத்தில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் ஆர். பி .உதயகுமார் திறந்து வைத்தார்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், திருமங்கலம் டிஎஸ்பி ரோகினி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் திருமங்கலம் விமான நிலைய சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் திருமங்கலம் டிரெயின் பள்ளியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்தார்.மேலும் திருமங்கலம் ஜெ. பேரவை ஆலோசனைக் கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.அமைச்சர் ஆர். பி.உதயகுமார் பேசியதாவது,தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை அனைவரும் தித்திக்கும் திருநாள். அதை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசினை அரசு வழங்கி வருகிறது.இந்த ஆண்டைப் பொறுத்தவரை கொரானா வைரஸ் நோய் பரவலால் ஏற்பட்டு பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையும்,டெல்டா பகுதியிலே புயலினால் கடுமையான மழையினால்அங்கே தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் தமிழகம் முழுவதும் கொரோனாவால் வேலை இருந்திருக்கும் சூழ்நிலை மற்றும் கனமழையால் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கின்றனர்.இந்த இரண்டு சூழ்நிலைகளில்தைத் திருநாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து இல்லங்களிலும் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுதமிழகத்திலுள்ள 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசினை அறிவித்து என்று இனிப்பான செய்தியை மக்களுக்கு அறிவித்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்