Home செய்திகள் நெபுலியம் தனிமம் இரு உயிரகத் தனிம மின்னணுக்களின் இணை எனக் கண்டறிந்த ஐரா சுப்பிரேகு போவன் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 21, 1898).

நெபுலியம் தனிமம் இரு உயிரகத் தனிம மின்னணுக்களின் இணை எனக் கண்டறிந்த ஐரா சுப்பிரேகு போவன் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 21, 1898).

by mohan

ஐரா சுப்பிரேகு போவன் (Ira Sprague Bowen) டிசம்பர் 21, 1898ல் நியூயார்க்கில் ஜேம்சு போவன் என்பவருக்கும் பிளிண்டா சுப்பிரேகு என்பவருக்கும் மகனாக பிறந்தார். இவரது குடும்பம் அடிக்கடி இடம்பெயர்ந்ததால் 1908ஆம் ஆண்டுவரை, தந்தையார் இறப்புவரை, வீட்டிலேயே பள்ளிக்கல்வியைக் கற்றார். அதற்குப் பிறகு அவரது தாயார் ஆசிரியராகப் பணிபுரிந்த ஆட்டன் கல்லூரியில் படித்தார். உயர்நிலைப் பள்ளியை 1915ல் முடித்ததும் அவர் ஆட்டன் கல்லூரியின் இளநிலைக் கல்லூரியில் சேர்ந்தார். பிறகு ஓபெர்லின் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919ல் பட்டப்படிப்பை முடித்தார். ஓபெர்லின் கல்லூரியில் படிக்கும்போதே போவன் இராபெர்ட் எட்பீல்டு எனும் அறிவியலாளருடன் இணைந்து இரும்பின் பண்புகளைப் பற்றி ஆய்வு செய்தார். இந்த ஆய்வு முடிவுகள் 1921ல் வெளியிடப்பட்டன.

போவன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1919 இலையுதிர்காலத்தில் இருந்து இயற்பியல் பயின்றார். 1921ஆம் ஆண்டிற்குள் இராபெர்ட் ஆந்திரூவ்சு மிலிக்கன் ஆய்வுக்குழுவிற்குள் ஓரிடம் பிடித்துவிட்டார். அவருக்கு வேதித் தனிமங்களின் புற ஊதாக்கதிராய்வுப்பணி தரப்பட்டுள்ளது. கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் மிலிக்கனைச் சேரும்படி ஜார்ஜ் எல்லெரி ஃஏல் 1921ல் சம்மதிக்க வைத்துவிட்டார். அப்போது போவனுக்கு அவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. ஃஏலின் தொடர்பால் போவனுக்கு மவுண்ட் வில்சன் வான்காணகத்திலும் பலோமார் வான்காணகத்திலும் பணிபுரியும் வாய்ப்பைத் தந்தது. போவன் கால்டெக்கில் இயற்பியல் பாடங்களை நட்த்தி கொண்டே அண்டக்கதிர் ஆய்விலும் புற ஊதாக்கதிர் ஆய்விலும் ஈடுபடலனார். இவர் தனிமவரிசை அட்டவணையில் உள்ள நிறைகுறைந்த தனிமங்களின் கதிர்நிரல் கணக்கீடுக்ளையும் தொடர்ந்தார். இந்த தரவுகள் வழியாகவும் வளிம ஒண்முகில் ஆய்வு ஆர்வத்தாலும் தாழ் அடர்த்தியில் உமிழப்படும் கதிர்வீச்சு பற்றி என்றி நோரிசு இரசெல், இரேமாண்டு சுமித் துகான் ஜான் குவின்சி சுட்டிவார்ட் ஆகியோர் எழுதிய ‘’வானியல்’’ என்ற நூலில் படித்ததும் இவர் தனது நெபுலியம் பற்றிய கண்டுபிடிப்பை எளிதாக அடையவைத்தது. வில்லியம் அக்கின்சு 1864ல் பூனைக்கண் ஒண்முகிலில் இருந்து 4959Å, 5007Å அலைநீளங்களில் உமிழப்படும் பச்சைநிற உமிழ்வுக் கோடுகளைக் கண்டுபிடித்தார். எந்தவொரு தனிமமும் இந்தவகை உமிழ்வுக் கோடுகளைச் செய்முறையில் காட்டாததால், பிறகு 1890ல் இந்தக் கோடுகளைப் புதிய தனிமம் ஒன்றுதான் உமிழ்வதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கு நெபுலியம் என்ற பெயரும் இடப்பட்டது. ஆனால் போவன் இரட்டை மின்னணு உயிரகத்தின் தவிர்க்கப்பட்ட நிலைபெயர்வுதான் இத்தகைய உமிழ்கோடுகளை காட்டுவதாக கணக்கிட்டுக் காட்டினார. பூனைக்கண் ஒண்முகிலில் இருந்த உயிரக மின்னணுக்கள் தம்முள் மோதிக்கொள்ள வாய்ப்பில்லாததாலும் அதனால் கிளர்நிலையில் இருந்து இயல்நிலைக்குப் பெயரமுடியாத்தாலும் எனவே தவிர்வு நிலைபெயர்வு மட்டுமே ஓய்வுற இயன்ற வழித்தடமாக நிலவுவதாலும் இக்கதிர்நிரல்கள் உமிழப்படுவதாக விளக்கம் தந்தார். போவன் இக்கண்டுபிடிப்புகளை 1927ல் வெளியிட்டார். இதனால் நெபுலியம் எனவொரு வேதித் தனிமம் ஏதும் நிலவவில்லை என்ற முடிவுக்கு வந்தார். போவன் 1936ல் தேசிய அறிவியல் கழகத்துக்குத் தேர்வு செய்யபட்டார். 1964ல் ஓய்வு பெறுவதற்கு முன்பும் பின்பும் பல்வேறு ஒளியியல் கருவிகளின் வடிவமைப்பை மேம்படுத்துவதில் முனைந்திருந்தார். எடுத்துகாட்டாக, இலாசு கம்பனாசு வான்காணகத்தில் இருந்த 100 அங்குலம் இரீனீ டியூபாண்டு கருவியைக் கூறலாம். இவர் வானிலையியலில் போவன் விகிதம் எனும் ஆவியாகும் மேற்பரப்பின் மீதமையும் கரந்துறை வெப்பத்துக்கும் உணர் வெப்பத்துக்கும் இடையிலான விகிதக் கருத்துப்படிமத்தை அறிமுகப்படுத்தினார். அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகம் வழங்கும் என்றி டிரேப்பர் விருது (1942), ஓவார்டு என். பாட்சு பதக்கம் (1946), அமெரிக்கக் கலை, அறிவியல் கழகம் தரும் இரம்போர்டு பரிசு (1949), பிரெடெரிக் ஈவ்சு பதக்கம் (1952), புரூசு விருது (1957), என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை (1964), அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1966) போன்ற பதக்கங்களை பெற்றுள்ளார். 1927ல் நெபுலியம் என்பது தனியான தனிமம் அன்று, மாறாக அது இரு உயிரகத் தனிம மின்னணுக்களின் இணை எனக் கண்டறிந்தார். நெபுலியம் தனிமம் கண்டறிந்த ஐரா சுப்பிரேகு போவன் பிப்ரவரி 6, 1973ல் தனது 74வது அகவையில் அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். நிலாவில் ஒரு குழிப்பள்ளம் போவன் குழிப்பள்ளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. குறுங்கோள் 3363 போவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆவியாகும் மேற்பரப்புக் கொந்தளிப்புப் பெருக்குகள் (பாயங்கள்) சார்ந்த போவன் விகிதம் பெயரிடப்பட்டுள்ளது. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!