Home செய்திகள்கீழக்கரை செய்திகள் 60 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதியும் மின்சார வசதியும் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்…

60 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதியும் மின்சார வசதியும் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்…

by ஆசிரியர்

வேதாரண்யம் வட்டத்தில் உள்ள தாணிக்கோட்டகம் ஊராட்சிக்குட்பட்ட கோபால கட்டளை 3வது வார்டு சின்னப்பன் காடு கோட்டைக்காடு பிச்சைக் கட்டளை  பகுதிகள் அனைத்தும் மண் சாலைகளுடன்,  மின்சார வசதி இல்லாமலும்,  ஆதிதிராவிடர் வாழும் இடங்களில் காங்கிரீட் வீடுகள் இல்லாமலும் மிக அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது ஏற்பட்ட புயல் காரணமாக மழை அதிகமாக பெய்து வெள்ளம் ஏற்பட்டதால் வீடுகள் இழந்து தவித்து வருகின்றனர் இந்த  கிராம மக்கள். இப்பகுதி மக்களின் குமுறலை கேட்க எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை எனவும், குறைகளை கேட்கவுமில்லை என மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

இந்தக் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் பல தடவை நேரில் சென்று புகார் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் அப்பகுதியில் வாழும் மக்கள் வாழ்வது கோயில் நிலங்கள் என்பதால் நிவாரணம் மற்றும் காங்கிரீட் வீடுகள் கட்ட முன் வருவது தடையாக உள்ளது எனவும்,  பகுதி மக்களுக்கு மின்சாரத் துறையின் ஆனால் மின்சாரம் வழங்கவும் மறுக்கின்றனர் என்பது பெரும் குறையாக உள்ளது.

அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா??.., மக்களின் பிரச்சினை தீருமா?? பொறுத்திருந்து பார்ப்போம்…

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com