என் . புதுப்பட்டியில் ரேஷன் கடை துவக்கம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள என். புதுப்பட்டியில் உள்ள பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பட்டியில் இருந்து நிலக்கோட்டை க்கு வந்து ரேஷன் பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் பல்வேறு நிலையில் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து புதுப்பட்டியில் புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனை ஏற்று நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா அ. தி. மு. க நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது. அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர் நகர பொறுப்பாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்..இவ்விழாவில் நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி , சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் மூர்த்தி , நகர பொறுப்பாளர்கள் முத்து, முனியப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா