
நெல்லையில் கழிவு பொருட்கள் சரியாக மேலாண்மை செய்யப்பட்டு அவை உபயோகமிக்க பொருட்களாக மாற்றப்படுகின்றன. இத்தகைய பணிகள் முழு ஈடுபாட்டுடன் நெல்லை மாநகராட்சி ஆணையாளரின் முயற்சியின் கீழ் நடைபெற்று வருகிறது.நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தினசரி 170 டன் குப்பைகள் உருவாகிறது. அதில் மட்கும் குப்பைகள் பிரிக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் மேலாண்மை செய்வதற்கு தற்போது நெல்லை மாநகராட்சி புதிய முயற்சி எடுத்து வருகிறது.நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் புதிய முயற்சியாக வீணாக குப்பைகளில் போடப்பட்ட பழைய டயர்கள்,உடைந்த பைப்கள்,பிளாஸ்டிக் பாட்டில்கள், மரக்கிளைகள் போன்றவற்றில் பயனுள்ள பொருட்களாக மறு உபயோகம் செய்யும் வகையில் மாற்றப்படுகிறது.இந்த பணி புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.நெல்லை மாநகர நல அலுவலர் சரோஜா, பாளை மண்டலத்தில் உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் ஆலோசனை படி சுகாதார அலுவலர் ஷாகுல் ஹமீது மேற்பார்வையின் கீழ் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் புதிய முயற்சியாக வேலவர் காலனி,சங்கர் காலனி,அருள் நகர், மனகாவலம்பிள்ளை நுண் உரம் செயலாக்க மையங்களில் மற்றும் வளம் மீட்பு மையங்களில் கழிவு பொருட்கள் மூலமாக சோதனை முயற்சியில் மறு உபயோக பொருள்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.உடைந்த பிவிசி பைப்கள்,இளநீர் கூடு, தேவையற்ற பாட்டில்கள் பழைய டயர் கொண்டு அழகிய பூந்தொட்டி, உடைந்த சின்டெக்ஸ் டேங்க் மறு உபயோகமாக பறவை கூண்டு ஆகியவை செய்யப்பட்டுள்ளது. திட கழிவு மேலாண்மை செய்வதென்பது பெரும் சவாலான விஷயமாக பார்க்கப்படும் வேளையில், இத்தகைய பணிகளில் மேற்பார்வையாளர் முருகன் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கனகப்ரியா, சீதா லட்சுமி, கண்ணன்,ரேவதி அருள்செல்வன் மற்றும் பணியாளர்கள் இதில் ஈடுபட்டு உபயோகமிக்க பல பொருட்களாக மாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.