அம்மையநாயக்கனூர் அருகே கூலித்தொழிலாளி வேன் மோதி பலி

தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் வயது. 31. தனியார் மில் தொழிலாளி. இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அம்மையநாக்கனூர் அருகே உள்ள சங்கராபுரத்திற்கு வந்தார். அங்கு உறவினரான வளன்ராஜா.வயது 27. அப்போது வளன்ராஜாவுக்கு சொந்தமான ஒரு ஆட்டுக் கிடாவை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மோட்டார்சைக்கிளில் ஆட்டுக்கிடாவை எற்றிக்கொண்டு நிலக்கோட்டை-அம்மையநாயக்கனூர் சாலையில் வந்து கொண்டு இருந்தனர்.மாலையகவுண்டன்பட்டி பிரிவு அருகில் சென்றபோது நாகையகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் பால்பண்ணையில் இருந்து பால் எற்றி வந்த வேன். மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் வளன்ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் இதைத்தொடர்ந்து விபத்து குறித்து பால்வேன் டிரைவர் பரமசிவம்.43.108 ஆம்புலன்ஸ்க்கு போன் முலம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த108 ஆம்புலன்ஸ் முலம் படு காயம் அடைந்த அந்தோணிராஜ் திண்டுக்கல் அரசு மருந்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா