செல்லூர் – தத்தனேரி இரயில்வே மேம்பாலத்தில் பாலம் இணைக்கும் பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் இரு மார்க்கமும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. எனவே 01.10.2023 முதல் 26.10.2023 வரை போக்குவரத்தில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பாளையம் வரும் பேருந்துகள் பாத்திமா கல்லூரி சந்திப்பு வலதுபுறம் குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளையம் செல்லலாம் மற்றும் கோரிப்பாளையம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் AV பாலம் – யானைக்கல் சந்திப்பு -சிம்மக்கல் ரவுண்டாணா – தமிழ்சங்கம் ரோடு வழியாக ஆரப்பாளையம் செல்லலாம். மறுமார்க்கமாக தமிழ்சங்கம் ரோடு – சிம்மக்கல் ரவுண்டாணா – யானைக்கல் சந்திப்பு – புதுப்பாலம் சந்திப்பு வலது புறம் திரும்பி கோரிப்பாளையம் சந்திப்பை அடையலாம்.
திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் அத்தியாவசிய கனரகவாகனங்கள் (பால் வண்டி,ரேசன் பொருட்கள்,பெட்ரோல் லாரிகள் மட்டும்) பாத்திமா கல்லூரி சந்திப்பு வலது – குரு தியேட்டர் சந்திப்பு – காளவாசல் சந்திப்பு இடது, அரசரடி சந்திப்பை அடைந்து தமிழ் சங்கம் ரோடு வழியாகவும் அல்லது பாத்திமா கல்லூரி சந்திப்பு இடது – கூடல்நகர் இரயில்வே மேம்பாலம் – ஆனையூர் – அய்யா்பங்களா சந்திப்பு புதுநத்தம் சாலை வழியாகவும் மற்றும் மூன்றுமாவடி சந்திப்பு அழகர்கோவில் சாலை வழியாகவும் கோரிப்பாளையம் செல்லலாம்.
திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக நான்கு சக்கர வாகனங்கள் செல்லூர் பாலம் வரும் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் தத்தனேரி Sub Way வழியாக பாலம் ஸ்டேசன் ரோட்டை அடைந்து கோரிப்பாளையம் பகுதிக்கு செல்லலாம். மறுமார்க்கமாக கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து செல்பவர்கள் செல்லூர் பாலம் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் அடியில் சர்வீஸ் சாலையில் சென்று – Sub Way வழியாக தத்தனேரி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலையை அடைந்து அம்மா பாலம் சந்திப்பு வழியாக செல்லலாம்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.