இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தேர்தல் ஆணையர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
புதிய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேரள பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த அதிகாரிகளில் ஞானேஷ்குமாரும் இருந்தார். சுக்பீர் சிங் சாந்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஏற்கெனவே தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வுபெற்றதை தொடர்ந்து, அவரது பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார். இந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.