நெல்லையில் புகழ்பெற்ற பனிமயமாதா ஆலயத்திற்கு சாலை வசதி-எம்எல்ஏ சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு!

நெல்லையில் புகழ்பெற்ற பனிமயமாதா ஆலயத்திற்கு மக்கள் சென்றுவர ஏதுவாக சாலை அமைக்கும் பொருட்டு இன்பதுரை எம்எல்ஏ மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தெற்கு கள்ளிகுளத்தில் பனிமயமாதா ஆலயம் அமைந்துள்ளது. நெல்லை− குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தவர்களும் ஏராளமானோர் வந்து வழிபடும் புகழ் பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலமாக இந்த தேவாலயம் விளங்கி வருகிறது.இந்த தேவாலயத்தின் அருகே அமைந்துள்ள உள்ள சிறிய மலை மீது தேவமாதா பக்தர்களுக்கு காட்சி கொடுத்தபோது மாதாவின் பாதங்கள் மலை மீது பதிந்துந்துள்ளதாகவும்,மலை மீது காணப்படும் கால் தடத்தை மாதாவின் கால்தடம் எனவும் அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.தமிழக சட்டப் பேரவையில் மானிய கோரிக்கையின் போது இன்பதுரை எம்எல்ஏ பேசுகையில் தெற்கு கள்ளிகுளம் பனிமய மாதா ஆலயத்தை தமிழக அரசின் சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து தமிழக அரசு அதற்காக அரசாணை பிறப்பித்து தற்போது தெற்கு கள்ளிகுளம் பனிமாதா ஆலயம் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பின் மூலமாக தெற்கு கள்ளிகுளத்தில் குடிநீர் வசதி சாலை வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 80 லட்சம் மதிப்பில் செய்து முடிக்கப்பட்டு மேம்படுத்தப் பட்டுள்ளன.இந்த நிலையில் புகழ்பெற்ற பனிமய மாதா பாதம் பட்ட மலைக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மாதா கால்தடம் பதிந்த மலைக்கு சாலை அமைக்கும் பணிகளுக்கான ஆய்வினை இன்பதுரை எம்எல்ஏ தலைமையில் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி சீதாராமன் மாவட்ட உதவி சுற்றுலா அதிகாரி நித்திய கல்யாணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிஷோர் குமார், கோபாலகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சித்துறை பொறியாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது ராதாபுரம் ஒன்றியச் செயலாளர் அந்தோணி அமல ராஜா பனிமய மாதா தேவாலயத்தின் முன்னாள் தர்மகர்த்தா ஆனந்த ராஜா, அதிமுக நிர்வாகிகள் அருண் புனிதன்,கிளை செயலாளர் ராஜன், சொசைட்டி தலைவர் ராதாபுரம் முருகேசன்,லாரன்ஸ் மணி, ஜுலி,ஜெய்சிங் வில்லியம் எடிசன்,ஜார்ஜ்,மரியராஜ்,அருண்குமார்,முல்லை ரஸ்வின்,நேவிசன், வள்ளியூர் சந்திரமோகன்,கோட்டை கபாலி, ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்