இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றில் முதலாவதாக ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய கொடி வண்ணம் தீட்டுதல் போட்டியும், வகுப்பு மூன்று முதல் ஐந்து வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தேசபக்தி பாடல் போட்டியும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி துவங்கி வைத்தார். போட்டியில் கவிஞர் முத்துசாமி மற்றும் கவிஞர் சுப்பையா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
இப்போட்டிகளில் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த ஏராளமான பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுதந்திர தினத்தன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் பரிசுகள் வழங்கப்படும். தொடர்ந்து 6 முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்திய தேசிய நினைவுச் சின்னங்கள் என்கிற தலைப்பில் கட்டுரை போட்டி நடந்தது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எனக்கு பிடித்த குடியரசு தலைவர் என்கிற தலைப்பில் பேச்சுப்போட்டியும் நடைபெறுகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.