Home செய்திகள் உசிலம்பட்டி அருகே திருவள்ளுர் தினத்தை முன்னிட்டு – 5க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் திருக்குறள் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.,

உசிலம்பட்டி அருகே திருவள்ளுர் தினத்தை முன்னிட்டு – 5க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் திருக்குறள் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.,

by mohan

கடந்த 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.,இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருக்குரளின் அருமைகள் குறித்து  திருவள்ளுவர் ஞானதீப கல்வி கழகத்தின் சார்பாக திருவள்ளுவர் தின விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா திருமண மஹாலில் (பழைய விவேகானந்தா பள்ளி) திருவள்ளுவரின் சிறப்புகளை எடுத்துக் கூறும் வகையில் எழுமலை பாரதியார் மெட்ரிகுலேஷன் எழுமலை விஷ்வ வித்யாலயா மெட்ரிகுலேஷன் சூலபுரம் திருவள்ளுவர் மெட்ரிகுலேஷன் அத்திபட்டி ராமையா நாடார் பள்ளி எழுமலை விவேகானந்தா நடுநிலைப்பள்ளிஇவை அனைத்து பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சியோடு மத நல்லிணக்க ஊர்வலம் பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.,எழுமலை திருவள்ளுவர் பீடத்தில் துவங்கிய இந்த பேரணி எழுமலையின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று துவங்கிய இடத்திலேயே நிறைவுற்றது.,சுமார் 200க்கும் அதிகமான மாணவ மாணவிகள் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளுடன், திருக்குறள்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக சென்று எழுமலையின் புள்ளுக்கடை மைதானம், தேவர் சிலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்/

உசிலை மோகன்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!