
தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட நெல்கட்டும் செவலில் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தலைமையில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், இளைஞர்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை வீணடிக்காமல், அரசு தேர்விற்கு தயாராகும் வகையில் தங்களை தயார்படுத்திக் கொண்டு அரசு வேலை பெற கடின முயற்சி செய்ய வேண்டும் எனவும்,நீங்கள் செய்யும் ஒரு தவறான செயலின் (குற்றம்) மூலம் உங்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அரசு வேலை பெற முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே நல்ல முறையில் படித்து நல்ல நிலையை அடைய வேண்டும் என்று கூறினார். மேலும் தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவ துவங்கியுள்ளதால் வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்தும்,சாலை பயணங்களின் போது தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கணேஷ், SJHR துணைக் காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, காவல் ஆய்வாளர் திரு. ராஜாராம், காவல் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.