நெல்லையில் விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யா நூற்றாண்டு விழா;மமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்பு..

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர், என் சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி தமுமுக மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் பங்கேற்று சங்கரய்யா அவர்களின் போராட்ட வாழ்வு மற்றும் அவரது பணிகளை வாழ்த்தி பேசினார்.தமுமுக மமக மாவட்ட துணை தலைவர் தேயிலை மைதீன் மமக மாவட்ட துணை செயலாளர் அ.காஜா மேலப்பாளையம் ‌பகுதி செயலாளர் சேக் மதார் உள்ளிட்டோர் மமக தமுமுக சார்பில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்க் கடல் நெல்லை கண்ணன், ஜமாத்துல் உலமா சபை மாநில தலைவர் பி.ஏ.காஜா மொய்னுத்தீன் பாகவி அவர்கள், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் அண்ணாச்சி ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் மு.அப்துல் வகாப் எம்எல்ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கே எம் ஏ நிஜாம், தென்காசி மதிமுக மாவட்ட செயலாளர் திருமலாபுரம் ராஜேந்திரன், மார்க்ஸிஸ்ட் கட்சி வீ.பழனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எல்.கே.எஸ்.மீரான்மைதீன், விசிக மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், ஆதித் தமிழர் பேரவை கலைகண்ணன், தமிழ் புலிகள் கட்சி தமிழரசு எழுத்தாளர் நாறும்பூநாதன், மருத்துவர் ராமகுரு, முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசி, வாழ்த்துரை வழங்கினார்கள்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..