
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்01.08.2021 முதல் 07.08.2021 வரை உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 01.08.2021ஞாயிறு அன்று தாய்ப்பாலின் அவசியம் மற்றும் மகத்துவம் குறித்து கருத்தரங்கம் இணை இயக்குநர் மரு. வெங்கட ரெங்கன் தலைமையிலும், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. ஜெஸ்லின் முன்னிலையிலும் நடைபெற்றது. 02.08.2021திங்கள் அன்று தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றிய விளக்கப்பட போட்டி செவிலியர் கல்லூரி மாணவிகளிடையே நடத்தப்பட்டது. இதில் அண்ணாசாமி ராஜம்மாள் செவிலியர் கல்லூரி மற்றும் ஆலடி அருணா செவிலியர் கல்லூரியை சேர்ந்த 40 மாணவிகள் பங்கேற்றனர். அவர்களது விளக்கப்பட காட்சி கருத்தரங்க அவையில் காட்சிப்படுத்தப்பட்டு பரிசுகள் வழங்க தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. 03.08.2021 செவ்வாய் அன்று தாய்ப்பாலின் அவசியம் குறித்து வினாடி வினா போட்டி 55 தாய்மார்களிடையே நடத்தப்பட்டது. மேலும் 03.08.2021 அன்று தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகத்தை அனைத்து தாய்மார்களுக்கும் முன்னாள் ஆலங்குளம் எம்.எல்.ஏ மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணா அவர்கள் வழங்கினார். மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தாய்மார்களிடையே சிறப்புரையும் ஆற்றினார். 04.08.2021புதன் அன்று தாய்ப்பால் கொடுத்து ஆரோக்கியமாக வளர்ந்த குழந்தைக்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் 32 குழந்தைகள் பங்குபெற்றனர். பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டன. 05.08.2021 வியாழன் அன்று உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பங்கு பெற்ற ரங்கோலி போட்டி நடத்தப்பட்டது.இதில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை மையமாக கொண்டு ரங்கோலி வரையப்பட்டது. இதில் ஊழியர்கள் 6 குழுவினராக பங்குபெற்றனர். சிறந்த ரங்கோலி தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 06.08.2021 வெள்ளி அன்று தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் (I.A.P) இணைந்து நடத்தும் உலக தாய்ப்பால் வார விழா கருத்தரங்க அறையில் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 07.08.2021சனிக்கிழமை தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.