
புளியங்குடியில் விற்பனைக்காக புகையிலை பொருட்களை கொண்டு வந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.8,50,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் செங்கண் (வயது 50).இவர் சேலத்திலிருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் காவல் துறையினர் வாகன சோதனை மேற்கொண்டதில்Eicher,Eeco,Auto,Activa Bike ஆகிய வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 1320 kg தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து மேற்படி விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை வாங்கி வந்த முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் செங்கண் (50), மற்றும் வாகன ஓட்டுனர்களான சேர்ந்தமரத்தை சேர்ந்த துரைகுட்டி என்பவரின் மகன் குமார் (31), கடையநல்லூரை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரின் மகன் துரை (40), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் நடராஜ் (45) வெங்கடாசலம் என்பவரின் மகன் கோவிந்தராஜ் (22) ஆகிய ஐந்து நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 8,50,000 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 12,00,000 பணம் மற்றும் 10,00,000 மதிப்பிலான 4 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.