Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொடர் விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா;

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொடர் விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா;

by mohan

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி தமிழகம் முழுவதும் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் வகையில் தற்போது தென்காசி மாவட்டம்முழுவதும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் உயரா வண்ணம் தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 01.08.2021 அன்று கொரோனா விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டு, கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்,இ.ஆ.ப., துவக்கி வைத்தார்

.இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு. சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து தென்காசி தினசரி வார காய்கறி சந்தையில் முகக் கவசம்,கைகழுவும் முறை, சமூக இடைவெளியை பின்பற்றக்கூடிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து துண்டுப் பிரசுரங்கள், சிற்றேடுகள், டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளங்களின் மூலம் விழிப்புணர்வுஏற்படுத்தவும், கடை வீதிகள், இரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வரும் மக்களிடையே முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், “வியாபாரிகள் நலச்சங்கங்களுக்கு கொரோனா விழிப்புணர்வுஏற்படுத்தவும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும், மாணவர்களுக்கிடையே குறும்படப் போட்டிகள்,ஒவியப்போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோ மூலம் கேளவி பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமியகலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்க கபசுரகுடிநீர் வழங்கவும், கிராம அளவில் வார்டு அளவில் மண்டல அளவில் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கௌரவித்துப் பரிசுகள்வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா மேலாண்மைக்கான வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் சுடைபிடிப்பது, கைகளைஅடிக்கடி சோப்பு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை சிகிச்சை பெறவும், மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களைஅன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநர் நலப்பணிகள் மரு. வெங்கட்ரெங்கன், துணைஇயககுநர்சுகாதாரப்பணிகள் மரு.அருணா மற்றும் முக்கிய பிரமுகர் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் இரண்டாவது தினமான 02.08.2021 திங்கள் கிழமை பொதுமக்கள் கைகள் கழுவுவதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் துவக்கி வைத்து தெரிவிக்கையில், முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, கொரோனா மூன்றாவதுஅலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தீவிர தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் 01.08.2021 அன்று துவக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தினமான 02.08.21 திங்கள் கிழமை தென்காசி நகராட்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வின் போது பொதுமக்கள் கை கழுவுவதன் முக்கியத்துவத்தை அறிந்து அதை தவறாது கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். மேலும் கைகளை கழுவும் முறையினை பற்றிய செயல் விளக்கமளிக்கப்பட்டது.மேலும் கை கழுவும் முறையை பற்றிய துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுஅலுவலகப் பணியாளர்கள் அனைவரும் பங்கேற்ற கோவிட-19 தடுப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்றுக் கொண்டார்கள். இதனை தொடர்ந்து கோவிட்-19 தடுப்பு முறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கோவிட்-19 தடுப்பூசி பற்றிய குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா, திட்ட இயககுநர் ஊரக வளர்ச்சி முகமை சரவணன், மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அருணா, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!