தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கோவிட் முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு விழா..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அனைத்து மருத்துவர்களும் அனைத்து செவிலிய கண்காணிப்பாளர்களும் இணைந்து மருத்துவமனையில் கோவிட் பணிபுரிந்த மற்றும் பணி சிறப்பாக நடைபெற உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா 29.07.2021 வியாழக் கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் உறைவிட மருத்துவர் அகத்தியன் வரவேற்புரை ஆற்றினார். இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் நெடுமாறன் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், கொரோனா சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஆய்வக நுட்பனர்கள் மற்றும் பாதுகாவலர்கள், ஓட்டுநர்களின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறி, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார். கொரானா காலத்தில் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த போது பல இன்னல்களுக்கு இடையில் தன்னுயிரை துச்சமாக மதித்து , தென்காசி மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவமனை பணியாளர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொண்டார். கொரானா காலத்தில் அயராது உழைத்த 108 அவசர ஊர்தி பணியாளர்களையும், அமரர் ஊர்தி பணியாளர்களையும், காவல்துறை அலுவலர்களையும், தீயணைப்புத்துறை அலுவலர்களையும் வாழ்த்தி பாராட்டினார். மருத்துவமனையில் பணிபுரிந்த முன்கள பணியாளர்களை பாராட்டியதோடு அல்லாமல், அவர்களின் குடும்பத்தினரின் தியாகத்திற்காக பணியாளர்களின் குடும்பத்தினரையும் பாராட்டி பேசினார். கொரானா காலத்தில் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் நிதியுதவி நன்கொடையாக வழங்கிய ZoHo. நிறுவனம், ரோட்டரி சங்கம், சேவாலயா நிறுவனம், திருநெல்வேலி கேன்சர் கேர் சென்டர் நலவாழ்வு மையம், அமர்சேவா சங்கம், வியாபாரிகள் நலச்சங்களுக்கு நன்றிகளை கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் காசநோய் மருத்துவம் வெள்ளைச்சாமி , மூத்த மருத்துவர் கிருஷ்ணன், பல் மருத்துவர் லதா, குழந்தைகள் மருத்துவர் கீதா, மகப்பேறு மருத்துவர் அனிதா பாலின், மருத்துவர் கார்த்திக் அறிவுடைநம்பி, மருத்துவர் புனிதவதி, மருத்துவர் ராஜேஷ், மருத்துவர்கள் ரஜினிகாந்த், மாரிமுத்து, இர்பான், மல்லிகா, முத்துக்குமாரசாமி, ராஜலஷ்மி ,மது, பாபு, அன்ன பேபி, மகேஷ் திருமலைக்குமார், ராம் சுந்தர், மணிமாலா, ரவிச்சந்திரன், ஆலிஸ் ரூத் மேரி,முசாம்மில், ஜோஸ் ஆண்ட்ரூ வளராய், பழனி, தமிழருவி,கிருத்திகா, அல்மாஸ் பானு, விக்னேஷ், கார்த்திக் ,ஜெரின்,முத்துராமன், கோபிகா, நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக மூத்த மருத்துவர்கள் முன்னாள் மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் மருத்துவர் ராமசுப்பு மற்றும் மருத்துவர் முத்தையா, முன்னாள் மருத்துவர்கள் மருத்துவர் மகேஸ்வரி, மருத்துவர் இஸ்மாயில், மருத்துவர் சுப்பிரமணியம், மருத்துவர் முகைதீன் அகமது ஆகியோர் விழாவில் கலந்து முன்களப் பணியாளர்களை பாராட்டி சிறப்புரை ஆற்றினர். மருத்துவர் முத்துக்குமாரசாமி நன்றியுரை ஆற்றினார். அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டு இனிதே விழா நிறைவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்