
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ரவணசமுத்திரத்தில், அமைந்துள்ள கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்,அதனை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள 900 நபர்கள் சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதியாக கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அந்த வங்கியில் உள்ள பலரது கணக்கில் பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக அதிகாரிகள் விசாரணை செய்து மோசடியில் ஈடுபட்ட, அங்கு பணியில் இருந்த சொசைட்டி ஊழியர்கள் சிலரை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை. வங்கியில் சென்று பாதிக்கப்பட்டவர்கள் கேட்கும் போது விசாரணை நடந்து வருவதாக கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர் தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் கோவிந்தப்பேரி கூட்டுறவு சங்கத்தில் முறையிட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மேல் அதிகாரிகளுக்கு தொடர்பு கொள்ளுமாறு கூறினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவில்லை எனில் அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்களை இணைத்து மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என முஸ்லிம் லீக் சார்பில் தெரிவிக்கப்பட்டதுடன், முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைபதிவாளர் ஆகியோருக்கு மனுக்களை அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.