தென்காசி அருகே சாலையில் தவறவிட்ட லேப்டாப்; உரிய நபர்களிடம் ஒப்படைத்த இளைஞர்களுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு..

பண்பொழி பகுதியில் சாலையில் தவறவிட்ட லேப்டாப்பை உரிய நபர்களிடம் ஒப்படைத்த இளைஞர்களின் இச்செயலை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPSபாராட்டினார்.மேலும் அந்த இளைஞர்களை நேரில் அழைத்து நற்சான்று வழங்கினார். தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் 15.07.2021 மாலை 04:30 மணி அளவில் ஐயப்பன் மற்றும் பிரவீன்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் அவர்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவர்களின் முன் சென்று கொண்டிருந்த காரின் டிக்கி சரியாக மூடாத காரணத்தினால் டிக்கியில் இருந்த பேக் தவறி கீழே விழுந்தது. தவறவிட்ட பேக்கை மீட்ட இளைஞர்கள் அவர்களது இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று அதனை உரிமையாளரிடம் கொடுக்க முயற்சி செய்தும் அவர்கள் வேகமாக சென்று விட்டதால் கொடுக்க முடியவில்லை. பின் அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் லேப்டாப் மற்றும் சில பொருள்கள் இருந்துள்ளது. பின்பு காவல்துறையின் உதவியுடன் உரிய நபர்களிடம் லேப்டாப் அறிவுரை வழங்கி ஒப்படைக்கப்பட்டது. எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி சாலையில் தவறவிட்ட லேப்டாப்பை உரிய நபர்களிடம் ஒப்படைத்த தென்காசி K.R காலனியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் ஐயப்பன் மற்றும் செல்வராஜ் என்பவரின் மகன் பிரவீன்குமார் ஆகிய இரண்டு இளைஞர்களையும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS நேரில் அழைத்து அவர்களின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து நற்சான்றிதழ் வழங்கினார். நேர்மை மிக்க இளைஞர்களின் இச்செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்