
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி, விக்கிரமங்கலம், வின்னக்குடி, சொக்கத்தேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 20நாட்களுக்கு மேலாக அரசு நெல் கொள்முதல் மையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை அதிகாரிகள் கொள்முதல் செய்யபட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் மழையில் நனைந்து நெல்மூட்டைகள் அனைத்தும் சேதமாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு பல முறை கொண்டுசென்ற போதும், நெல் மூட்டைகள் அரசின் வாணிப நெல்கொள்முதல் மையத்தின் மூலமாக கொள்முதல் செய்யப்படவில்லை. இந்நிலையில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலபொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கதிரவன் மற்றும் விவசாயிகள் அரசு நெல்கொள்முதல் மையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை அரசு சார்பில் அதிகாரிகள் உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் கோரிக்கை மனு வழங்கினார். மனுவை பெற்ற கோhட்டாட்சியர் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் நெல் கொள்முதல் மையத்தில் கொள்முதல் செய்வதில் அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்தி தருவதற்காக பலர் முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
உசிலைசிந்தனியா
You must be logged in to post a comment.