கடைநல்லூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா; பத்திரிகையாளர் குடும்பத்திற்கு நிதியுதவி..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப்பின் 2021-22 புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய தலைவராக சாலமோன் அவர்களும் செயலராக குருபிரசாந்த், பொருளாளராக மாரியப்பன் ஆகியோர் பொறுப் பேற்றுக் கொண்டனர். உடனடி முன்னாள் தலைவர் பரமசிவன் வரவேற்புரை ஆற்றினார். துணை ஆளுனர் காஜா மைதீன் இரண்டு புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுனர் டாக்டர் சேக்.சலீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் துணை ஆளுனர் இரத்னா பிரகாஷ்டர தொகுத்து வழங்கினார். சகாரானா ரெஸ்கெல்லா , உலகா சுந்தர் , தனியார்பள்ளி மாநில அமைப்பாளர் கல்யாணசுந்தரம் , சமூகநல இயக்கம் ஜபருல்லா , சீனாமசூது, மீரான் முகைதீன் போன்றோர் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழாவில் சில நாட்களுக்கு முன் மறைந்த கடையநல்லூர் சொக்கம்பட்டியை சேர்ந்த மாலைமுரசு நிருபர் Rtn வெள்ளத்துரையின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவியாக,Rs 1,25,000 வழங்கப்பட்டது. அவரது பெண் குழந்தையின் கல்லூரிச் செலவு முழுமையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் தலைவர்கள் விஷ்வாசுல்தான் , சேக் சிக்கந்தர் , ரமேஷ், சரவணன் , மோதிலால் , ய செல்வமுருகேசன், முருகன் , வைரவ செல்வன் ,சங்கர் , ராஜூ , போன்றோர் செய்திருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..