
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த திரளியில் உள்ள அன்னை பாத்திமா கேடரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி பெயரில் போலியாக சமூக வலைத்தளத்தில் முகநூல் பக்கம் ஓபன் செய்து அந்த கல்லூரி பெயருக்கு வரும் மாணவர் சேர்க்கையை மாவட்டத்திலுள்ள சிஇஓ, அல்ட்ரா உள்ளிட்ட பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு கொடுத்து ஒரு மாணவர் சேர்க்கைக்கு 40,000 முதல் 50,000 வரை கமிஷனாக பெற்று சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளது தெரிய வந்ததுமோசடி செய்த நபர் அன்னை பாத்திமா கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியர் அனுப்பானடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மதுரை ஜி ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சபரீசன் ஆகிய இருவரும் என தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து கல்லூரி சேர்மன் ஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரைமாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.மதுரை மாவட்ட காவல் எஸ்பி பாஸ்கரன் உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பி ராஜேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.