Home செய்திகள் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் உளவியல் ஆலோசனை மையம்..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் உளவியல் ஆலோசனை மையம்..

by mohan

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில், நோயாளிகளுக்கு உதவுவதற்காகவும், ஆலோசனை வழங்குவதற்காகவும், நோயாளிகளின் சிகிச்சை குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவும், மாவட்ட ஆட்சித்தலைவர் Dr.சமீரன் இ.ஆ.ப ஆலோசனையின் படி 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது . இங்கு நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பயனாளிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்கு, உளவியல் ஆலோசகர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். தென்காசி மாவட்ட பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ள தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 6374711850, 6374711851, Phone: 04633-281171.

மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பொதுமக்கள், தங்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண Post covid op தொடங்கப்பட்டுள்ளது. தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரை தென்காசி அரசு தலைமை மருத்துவமனையின் புதிய வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் இயங்குகிறது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்காசி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!