Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் நடமாடும் காய்கறி விற்பனை; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்டத்தில் நடமாடும் காய்கறி விற்பனை; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..

by mohan

தென்காசி மாவட்டத்தில் வீடுகள் தோறும் சென்று காய்கறி தொகுப்பு விற்பனை செய்யும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் துவக்கி வைத்தார். கொரோனா தடுப்புப்பணி நடவடிக்கைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் தளர்வு இல்லாத ஊரடங்கு அமல்படுத்தியதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசையில் 24.05.2021 திங்கள் கிழமை பொதுமக்கள் இருப்பிடங்களுக்கே சென்று காய்கறியை வழங்குவதற்காக நடமாடும் காய்கறி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 24.05.2021 முதல் ஒருவார காலத்திற்கு எவ்வித தளர்வும் இல்லாத ஊரடங்கு தமிழ்நாடு முதலமைச்சரால் அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த காலகட்டங்களில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் போன்ற பொருட்கள் எவ்வித இடர்பாடும் இன்றி கிடைத்திட பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று விற்பனை செய்திட, நடமாடும் காய்கறி வாகனங்களை இயக்கிட உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக இயக்கத்தின் சார்பில் 5 நான்கு சக்கர வாகனங்கள் மூலமாகவும், 250 இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், நகராட்சி சார்பில் 20 நான்கு சக்கர வாகனங்கள் மூலமாகவும், பேரூராட்சியின் சார்பில் 100 இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், தோட்டகலைத் துறை சார்பில் 30 நான்கு சக்கர வாகனங்கள் மூலமாகவும், வேளாண்மைத்துறை சார்பில் 30 நான்கு சக்கர வாகனங்கள் மூலமாகவும் காய்கறி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகமொத்தம் 85 நான்கு சக்கர வாகனங்களும், 350 இருசக்கர வாகனங்கள் முலமாக பொதுமக்களின் இல்லங்களை தேடி காய்கறிகளை நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், பொதுமக்களின் தேவைக்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடமாடும் காய்கறி வண்டிகளை அன்றாட தேவைக்கு பயன்படும் காய்கறிகளை தொகுத்து ரூ.30, ரூ.60, ரூ.100 என்ற விலையில் தொகுப்பாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேவைக்கேற்ப சில்லறை விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை பணியில் ஈடுபட்டுள்ள 650 நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அந்தந்த ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் கொரோனா தொற்று காலங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்ப்பதற்காகவும், நோயின் தொடர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காகவும், அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அவர்களின் இல்லங்களுக்கே சென்று நியாயமான விலையில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாகனங்களில் வாயிலாக பொருட்களை வாங்கும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து சரியான முறையில் முகக்கவசம் அணிந்து, கூட்டம் கூடுவதை தவிர்த்து பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும். இதன் முலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கப்படும். ஆகையால் பொதுமக்களாகிய நீங்கள் கொரோனா தடுப்புப்பணி மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.சரவணன், இணை இயக்குநா (வேளாண்) தவமணி, துணை இயக்குநர்கள் வேளாண் வணிகம் கிருஷ்ணகுமார், தோட்டகலைத்துறை ஜெயபாரதி மாலதி, மாவட்ட நேர்முக உதவியாளர் (வேளாண்) பாலசுப்பிரமணியன், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முக சுந்தரம், சர்ச்சின் சிவராஜ், ஒருங்கிணைப்பாளர் உதவி அலுவலர் மகளிர்திட்டம் சிவக்குமார், அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!