Home செய்திகள் மதுரை – ட்ரோன் மூலம் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பு

மதுரை – ட்ரோன் மூலம் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பு

by mohan

கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு தொடர்பான ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமல்படுத்த பட்ட நிலையில் மதுரை மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது .ஒலிபெருக்கி உடன் கூடிய அதி நவீன ஆளில்லா விமானம் ( ட்ரோன் ) மூலம் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகம் முழுவதும் 24.05.2021 இன்று முதல் 30.05.2021 வரை ஒருவரான காலம் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்துவதையொட்டி மதுரை மாநகரில் இன்று முதல் அமல்படுத்தப்படுவதால் பொதுமக்களின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.ஊரடங்கின் காரணமாக மதுரை மாநகர் காவல் துறையினர் முக கவசம் அணிவதை வலியுறுத்தி பல்வேறு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையம் முன்பு நடைபெற்ற விழிப்புணர்வு இந்நிகழ்வை மதுரை மாநகர சட்ட ஒழுங்கு துணை கமிஷனர் சிவபிரசாத் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்வுகளை பார்வையிட்டர் இதில் திலகர் திடல் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளர் ரமேஷ் சுப்பிரமணியபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் லிங்க பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!