விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி மற்றும் கிராமப்பகுதிகளில் கொரோணா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகம், வருவாய் துறை நிர்வாகம், காவல்துறை மற்றும் தோட்டக்கலை துறை காய்கறி மொத்த வியாபாரிகள், பலசரக்கு மொத்த வியாபாரிகள், மகளிர் குழு என அனைவரையும் அழைத்து ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது தொற்று குறைப்பதற்கு அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களுக்கு தேவையான பொருட்களை வீடு வீடாக கொண்டு சென்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 100ரூபாய் காய்கறிகள் பை, 200 ரூபாய் பை, பொது மக்களின் தேவைக்கேற்ப கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அதற்கு மொத்த வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என கூட்டத்தில் கலந்துரையாடினர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.