Home செய்திகள் பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக ஜூன் 15 வரை ரயில்கள் ரத்து

பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக ஜூன் 15 வரை ரயில்கள் ரத்து

by mohan

ஊரடங்கு காரணமாக பயணிகளின் போதுமான ஆதரவு இன்மையால் சில ரயில்கள் ஜூன் 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.கரோனா பெருந்தொற்று காரணமாக வருகின்ற மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் நிலையங்களில் பொது மக்களின் வருகை பெருமளவு குறைந்துள்ளது.இதனால் பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக சில ரயில்கள் மே 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரயில்கள் ரத்து ஜூன் 15 வரை நீட்டிக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வண்டி எண் 06321/06322 நாகர்கோவில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் பகல்நேர சிறப்பு விரைவு ரயில் மற்றும் வண்டி எண் 02613/02614 சென்னை எழும்பூர் மதுரை சென்னை எழும்பூர் தேஜாஸ் சிறப்பு ரயில் ஆகியவை ஜூன் 15 வரை ரத்து செய்யப்படுகிறது.மேலும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – பெங்களூரு, சென்னை எழும்பூர் – திருச்சி, கோயம்புத்தூர் – மங்களூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ஜூன் 15 வரை ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!