
தென்காசியில் நிறுததப்பட்டுள்ள ரயில்களை மீண்டும் இயக்கக்கோரி மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மமக நகர தலைவர் ராசப்பா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தென்காசி முதல் கோவை வரை புதிய ரயிலை இயக்க வேண்டும் என்றும்,நிறுத்தி வைக்கப்பட்டுள்ள செங்கோட்டை முதல் மதுரை வரை மற்றும் செங்கோட்டை முதல் திருநெல்வேலி வரை செல்லும் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கலஞ்சியம் பீர், நகர பொருளாளர் சாகுல் ஹமீது, நகர துணைத் தலைவர் அப்துல் ரசாக், ஒன்றிய செயலாளர் மஜீத் ஷா, துணைச் செயலாளர் செய்யது அலி, துணைச் செயலாளர் ரபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் தமுமுக மாநில செயலாளர் எஸ். மைதீன் சேட்கான், மமக மாவட்ட தலைவர் முகம்மது யாகூப், மமக மாவட்ட செயலாளர் பஷீர் ஒலி ஆகியோர் உரையாற்றினர். இதில் ஊடக அணி தென் மண்டல செயலாளர் எம்.எஸ்.ஹமீது, மமக மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் மஜித், இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜாபர் உசேன், வணிகர் அணி மாவட்ட செயலாளர் போரிங் பாதுஷா, வணிகர் அணி மாவட்ட பொருளாளர் பீர்முகமது,மனிதநேய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் நல்லவர் சேட் ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் என்.எஸ்.கே.கரீம் நன்றியுரையாற்றினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.