Home செய்திகள் நெல்லையில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி;காவல் உதவி ஆணையர் பங்கேற்பு..

நெல்லையில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி;காவல் உதவி ஆணையர் பங்கேற்பு..

by mohan

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை தேசிய பசுமைப்படை திருநெல்வேலி கல்வி மாவட்டம், சங்கர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை, சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு திருநெல்வேலி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் செல்வின் சாமுவேல் தலைமை தாங்கினார் . வந்திருந்தவர்களை சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பேராசிரியர் ஜெயமேரி வரவேற்றார். புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ் பேராசிரியர் அந்தோணி ராஜ் முன்னிலை வகித்தார்.புகையில்லா போகி பற்றி சங்கர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை திட்ட அலுவலர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் உரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மாநகர காவல் உதவி ஆணையர் எஸ்.சேகர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். நிறைவாக மாநகரச் செயலாளர் சு. முத்து சுவாமி நன்றி கூறினார். தலைமை ஏற்ற தேசிய பசுமைப்படை திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் செல்வின் சாமுவேல் பேசியதாவது, புகையில்லா போகி கடைபிடிக்க வேண்டும் பழைய பொருட்களை நாம் பயன்படுத்தக்கூடிய முறையில் மாற்ற வேண்டும். மக்க கூடிய பொருட்களை உரமாக வேண்டும்.எந்த பொருளையும் எரித்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடாது. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டும் என்று பேராசிரியர் டாக்டர் செல்வின் சாமுவேல் உரையாற்றினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com