Home செய்திகள் நெல்லையில் கவிஞர் பேரா ஒருங்கிணைப்பில் தேசிய நுகர்வோர் தின இணையவழி கருத்தரங்கம்-நுகர்வோர் அமைப்புகள் பங்கேற்பு..

நெல்லையில் கவிஞர் பேரா ஒருங்கிணைப்பில் தேசிய நுகர்வோர் தின இணையவழி கருத்தரங்கம்-நுகர்வோர் அமைப்புகள் பங்கேற்பு..

by mohan

நெல்லை பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பில் இணையவழியில் தேசிய நுகர்வோர் தின கருத்தரங்கம் நடந்தது. டிசம்பர் 24-ஆம் நாள் தேசிய நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் இணையவழியில் நடந்தது.கருத்தரங்கிற்கு பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் பேரா தலைமை தாங்கினார். தலைமையுரையில் கவிஞர் பேரா பேசுகையில் “ஒரு ஆண்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் விழிப்புணர்வு காலமாகும். வாழ்க்கையின் வெற்றிக்கு விழிப்புணர்வு மிக அவசியமானதாகும். அந்த வகையில் நுகர்வோர் விழிப்புணர்வு என்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். நுகர்வோரைப் பாதுகாக்க பிரத்யேகமாக சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டங்கள் வழியாக நுகர்வோருக்கு பல உரிமைகளும், பாதுகாப்புகளும் கிடைத்திருக்கிறது. இவைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டியதும் அறிவார்ந்த சமூகத்தின் தலையான கடமையாகும். இந்த விழிப்புணர்வு பரவலாக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதே யதார்த்தமாகும். இது மகிழ்ச்சியானதாக இருந்தாலும், இன்னும் முழு அளவிலான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும்”…எனத் தெரிவித்தார்.தொடர்ந்து, வழக்கறிஞர் முனைவர் டி.ஏ.பிரபாகர் கருத்துரை வழங்கினார். வழக்கறிஞர் பிரபாகர் தனது உரையில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தந்திருக்கும் உரிமைகள் பற்றியும் , சில நுகர்வோர் குறைதீர் மன்றத் தீர்ப்புகளையும் விரிவாக எடுத்துச் சொன்னார். இணையவழியில் நடந்த இந்தக் கருத்தரங்கில் தென்காசி நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த சுப்பிரமணியம், கலையாசிரியர் சொர்ணம், சூர்யா உட்பட கல்லூரி மாணவ மாணவிகள் பலர் இணைந்திருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!