Home செய்திகள் நெல்லையில் மகாகவி பிறந்த தினவிழா;நூலக வாசகர் வட்டத்திற்கு பாராட்டு விழா..

நெல்லையில் மகாகவி பிறந்த தினவிழா;நூலக வாசகர் வட்டத்திற்கு பாராட்டு விழா..

by mohan

தேசிய வாசிப்பு இயக்கம், கிராம உதயம் , ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடமி, இணைந்து தமிழ்நாடு அரசு நூலக ஆர்வலர் விருது பெற்ற நெல்லை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்திற்கு பாராட்டு விழா மற்றும் மகாகவி பாரதி பிறந்த நாள் விழா மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் அ.மரியசூசை தலைமை தாங்கினார். வாசகர் வட்ட துணைத் தலைவர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் இரா.வைலெட், கிராமஉதயம்,நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் ,தேசிய வாசிப்பு இயக்க தலைவர் சு. தம்பான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர்.அ.பெருமாள் மாநகர காவல் துணை ஆணையர் எஸ் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு வாசகர் வட்டத்தை பாராட்டி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வில் ஸ்மார்ட் லீடர்ஸ் அகடமி ஆலோசகர் பேராசிரியர் சிவசுப்பிரமணியன், பல்கலைக்கழக நூலகர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் பகத்சிங் புகழேந்தி, தேசிய வாசிப்பு இயக்க செயலர் முனைவர் கா.சரவணக்குமார், நூலகர் அகிலன் முத்துகுமார், சண்முகசுந்தரம், ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். வாசகர் வட்டத் தலைவர் அ.மரியசூசை, துணைத் தலைவர் முனைவர்.கோ.கணபதிசுப்பிரமணியன்,வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர்கள்.சு.முத்துசாமி, அ.பாலசுப்பிரமணியன், சிற்பி பாமா.கே.பி.அருணா சிவாஜி .கி.சந்திரபாபு,பெனிட்டா, மாவட்ட நூலக அலுவலர்.இரா. வையலட், நூலக கண்காணிப்பாளர் மு.சங்கரன்,நூலகர்கள்இரா.முத்துலட்சுமி சி.மகாலட்சுமி, கண்ணுப்பிள்ளை, புலவர் இராமசாமி, கெளரவ ஆலோசகர் முனைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.நிகழ்வில் மகாகவி பாரதியார் குறித்து முனைவர்.கவிஞர்.கோ. கணபதி சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.கவிஞர் பாப்பாகுடி இரா. செல்வமணி மகாகவி பாரதி குறித்து கவிதை வாசித்தார். வாசிப்பை நேசிப்போம் என்று தேசிய வாசிப்பு இயக்கத்தை சேர்ந்த லியோனால்,கவிதை வாசித்தார். ரூபாய் 1000 செலுத்தி நூலக புரவலராக கிராம உதய நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் கல்வித் துறை பணியாளர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் நூலகப் புரவலர் ஆயினர். விழாவில் தேசிய வாசிப்பு இயக்க பொருளாளர் பாலாஜி ,வாசகர்கள் ஜெயந்திமாலா பாலா, அருள்முருகன் மற்றும் சுப்பையா பாலமுருகன் கலந்து கொண்டனர். நிறைவாக நூலகர் இரா முத்துலட்சுமி நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com