மதுரை மாட்டுத்தாவணி அருகே முட்புதரில் சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது,இது குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியபோது அந்த பகுதி உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் மதுரை ஆனையூர் பகுதியை ரைசா என்ற திருநங்கையை போலிசார் கைது செய்தனர், உணவகத்தில் பணிபுரிந்த மதியழகன், திருநங்கை ரைசாவை தனியாக அழைத்து சென்ற தனிமையில் இருந்த போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் திருநங்கை ரைசா மதியழகனை தள்ளிவிட்டு கட்டையால் தாக்கியதில் உயிரிழந்ததாக போலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார், வாக்குவாதத்தில் ஏற்பட்ட மோதலால் கொலையாளியாக மாறிய திருநங்கை ரைசாவை போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் ரைசா அறுவைசிகிச்சை செய்யாத நிலையில் பாலினம் குறித்து உரிய ஆவணங்களை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
70
You must be logged in to post a comment.