Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்த 8 பேர் நீட் தேர்வில் வெற்றி

தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்த 8 பேர் நீட் தேர்வில் வெற்றி

by mohan

தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்த 8 பேர் நீட் தேர்வில் வெற்றிபெற்று சாதித்துள்ளனர்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரட்டையர்களான பிருந்தா, பிரீத்தா நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் இவர்களது மருத்துவர் கனவு நனவாகி உள்ளது. நீட் தேர்வில் பெற்றி பெற உதவிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5ஆம் தேதி எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதில் தென்காசி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்த 8 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றனர். அதில் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பயின்ற மாணவிகள் பிருந்தா, பிரீத்தா இரட்டையர்கள் இவரது தந்தையின் பெயர் சந்திரன் மேலக்கடையநல்லூர் நடுத் தெருவில் வசிக்கும் இவர் கூலி தொழிலாளி ஆவார். மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. மூத்த பெண் பிரதீபா கடந்த 2 ஆண்டுக்கு முன்பு நீட் தேர்வில் வெற்றி பெற்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.

வறுமையின் கோரப்பிடியில் இருந்த இரட்டையர்களான பிருந்தா, பிரீத்தா இருவரும் மூத்த சகோதரியை போல் தாமும் மருத்துவர் ஆக ஆசைப்பட்டுள்ளார்கள். இவர்கள் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 2018-2019ம் கல்வி ஆண்டில் பிருந்தா 12ம் வகுப்பில் 600க்கு 488 மதிப்பெண்களும், பிரீத்தா 450 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு தனியார் நீட் கோச்சிங் சென்டரில் படித்து நீட் தேர்வில் பிருந்தா 449, பிரித்திகா 332 மதிப்பெண்கள் பெற்று தனது மருத்துவ கனவை நனவாக்கி உள்ளனர். இருவருக்கும் திருநெல்வேலி மெடிக்கல் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.மேலும் தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை எஸ்ஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த கோமதி நீட் தேர்வில் 507 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. செங்கோட்டை அதே பள்ளியில் படித்த பண்பொழியைச் சேர்ந்த ஆஷூரா பேகம் என்ற மாணவி 310 மதிப்பெண்கள் பெற்று மதுரை ராஜாஜி மெடிக்கல் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி படித்த கௌதிகா நீட் தேர்வில் 280 மதிப்பெண்கள் பெற்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், செங்கோட்டை எஸ்ஆர்எம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் படித்த பவ்ஜுல்ஹிதாயா நீட் தேர்வில் 258 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மெடிக்கல் கல்லூரியிலும், திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த சுபாஷ் குமார் நீட் தேர்வில் 252 மதிப்பெண்கள் பெற்று திருநெல்வேலி மெடிக்கல் கல்லூரியிலும், சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்த சத்யா 203 மதிப் பெண்கள் பெற்று சென்னை இஎஸ்ஐ மெடிக்கல் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.இந்த ஆண்டு தென்காசி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவ-மாணவிகள் 8 நபர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு நனவாகி உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com