Home செய்திகள் தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரியை விரைந்து அமைக்க வேண்டும்;இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்…

தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரியை விரைந்து அமைக்க வேண்டும்;இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்…

by mohan

தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரியை விரைந்து அமைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் செய்யது சுலைமான் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் துணைச் செயலாளர் முகம்மது இஸ்மாயில் முன்னிலை வகித்தார். சாகுல் ஹமீது கிராஅத் ஓதினார். மாவட்ட செயலாளர் அனைவரையும் வரவேற்று பேசினார்.இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ, மாவட்ட ஜமாத்துல் உலமா சபைத்தலைவர் சம்சுதீன் ஹஜ்ரத், மாநில இளைஞரணி துணை தலைவர் செய்யது பட்டாணி, ஹபிபுல்லா, மாவட்ட மகளிரணி செயலாளர் சபுரா பீவி, தலைமை நிலைய பேச்சாளர் முஹம்மது அலி, முதலியார்பட்டி அப்துல் காதர், முஸ்லிம் மாணவர் பேரவை இணைச் செயலாளர் அல் அமீன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட இளைஞரணி தலைவர் டாக்டர் நவாஸ்கான், ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் முகைதீன் அப்துல் வஹாப், செய்யது, சாகுல்ஹமீது, அக்பர் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:தமிழகத்தில் 2021 இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முழு வெற்றிக்கு மாவட்டம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் களப்பணி ஆற்ற வேண்டும். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் முஸ்லிம் லீக் போட்டியிட கூட்டணி தலைமையிடம் மாநில முஸ்லிம் லீக் தலைமையை வலியுறுத்தப்பட்டது.2021 பிப்ரவரி மாதம் மாநில மாநாட்டை நடத்த வேண்டும். தென்காசி கடையநல்லூர் புளியங்குடி மருத்துவ மனைகளின் தரம் உயர்த்தி டாக்டர்கள், செவிலியர்கள், பணியிடங்களை நிரப்ப வேண்டும்.தென்காசியில் கட்டிமுடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை உடனே திறக்க வேண்டும். கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும். தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை விரைந்து அமைக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்ட முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொருளாளர் செய்யது இப்ராகிம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com