தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.பிறநாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பினர் இந்தியாவில் ஊடுருவல் செய்துள்ளனரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.கோவை ஆலாந்துறை ஆர் ஜி நகரில் ரஞ்சித் என்பவரது வீட்டில் காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறதுகோவை காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
95
previous post
You must be logged in to post a comment.