Home செய்திகள் அரசின் விசாரணை ஏஜென்சிகளால் எதிர்க்கட்சிகளை ஒடுக்கிஎதிரிகள் இல்லாத தேர்தலை எதிர்கொள்வது தான் பாஜகவின் குறிக்கோள்! – எஸ்டிபிஐ கடும் கண்டனம்..

அரசின் விசாரணை ஏஜென்சிகளால் எதிர்க்கட்சிகளை ஒடுக்கிஎதிரிகள் இல்லாத தேர்தலை எதிர்கொள்வது தான் பாஜகவின் குறிக்கோள்! – எஸ்டிபிஐ கடும் கண்டனம்..

by Askar

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வருமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது, வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் சங்பரிவாரின் சமீபத்திய திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாட்டின் சட்டத்தை மீறுபவர்கள் மீது கட்சிகளைக் கடந்து வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் கட்சி விசுவாசத்தின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு அரசின் விசாரணை ஏஜென்சிகளால் இரட்டை நிலை சிகிச்சை அளிக்கப்படுவது கவலையை ஏற்படுத்துகிறது.

எதிர்க் குரல்களை மிரட்டி மௌனமாக்கும் ஆளுங்கட்சியின் கருவியாக மத்திய விசாரணை அமைப்புகள் மாறி வெகு நாட்களாகிவிட்டது. எதிரிகள் இல்லாத தேர்தல் போட்டி ஜனநாயகம் அல்ல; அது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com