Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு -32


(கி.பி 661-750)

உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் மரணித்தபிறகு அடுத்த உமைய்யா ஆட்சியாளராக யஜீத் இப்னு அப்துல் மலீக் அவர்கள் பொறுப்பேற்றார்.

உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் அற்புதமான ஆட்சியின் தாக்கத்தால் அவர்களைப்
போலவே இவரும் தனது ஆட்சியின் ஆரம்பகாலங்களை துவக்கினார்.

உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களை நினைவு கூறும் வகையில், அவர்களின் நற்செயல்கள் பேசப்பட்டன.

தினசரி ஊதியமாக இரண்டு திர்ஹம்களையே உமர்இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்)
பெற்றார்கள்.
இது சாதாரண தொழிலாளி பெறும் ஊதியம் போன்றதாகும்.
அதற்கு மேல் அரசாங்க பணத்தை பெற அவர்கள் விரும்பவில்லை.

ஒருநாள்.. உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் தனது அலுவலகத்தில் இருந்தபோது தனது வீட்டிலிருந்து குடிப்பதற்கு வெண்ணீர் கொண்டுவர தனது
உதவியாளரிடம் கூறினார்கள்.

பணியாளர் அரச தர்பாரில் உள்ள சமையல் அறையிலிருந்து
வெண்ணீர் கொண்டுவந்து கொடுக்க அதனை பருகிவிட்டார்கள்.

பிறகு அதனை அறிந்த அவர்கள், பணியாளரிடம் ஒரு திர்ஹம் கொடுத்து அரச தர்பாரின் சமையலறைக்கு விறகு வாங்கி கொடுக்க சொன்னார்கள்.

ஒருமுறை இவர்களின் எளிமையான வீட்டிற்கு வந்த வெளிநாட்டு தூதர்,
வீட்டில் ஒரு நீர்க்குழாயை அவர்களே சரிசெய்து கொண்டு இருப்பதை பார்த்து அதிசயித்து போனார்.

ஒருமுறை தனது மனைவியிடம் திராட்சை பழம் உண்ண ஆசையாய் இருக்கிறது.வாங்க திர்ஹம் இருக்கிறதா? எனவினவ,மனைவி
திர்ஹம் ஏதுமில்லை.

கருவூலத்தில் கடன்வாங்கி கொடுங்கள்.நான் திராட்சை பழம் வாங்கி வந்து விடுகிறேன் எனக்கூற, கடன்வாங்கி நான் இறந்துவிட்டால்,
அதன்குற்றத்தால் நரக நெருப்பை நாளை நான் உண்ண விரும்பவில்லை என தனது ஆசையை அடக்கிக் கொண்டார்கள்.

உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் மனைவி பாத்திமா அவர்களின் தந்தையும், இரண்டு சகோதரர்களும் மன்னராக இருந்தவர்கள்.

அவர்களுக்கு கிடைத்த நகைகள்,
சொத்துக்கள், அனைத்தையும் பைத்துல்மால் என்னும் பொது கருவூலத்தில் ஒப்படைத்து விட்டு கணவனோடு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் மெய்க்
காப்பாளர்களை
வைத்துக்கொள்ள வில்லை.
“விதியும்,மரணமுமே
எனது காவலர்கள்”
என்றார்கள்.

உமைய்யாக்களின்
சலுகைகளை இவர்கள் ரத்து செய்துவிட்டதால்,
உமைய்யா குடும்பத்தினர்
இவர்கள் மேல் கடுங்கோபத்தில்
இருந்தார்கள்.

அரசரின் பணியாளர்கள்,
உங்களுக்கு எதிரிகளின் அதிகரித்து இருக்கிறார்கள்.

உணவில் விஷம் கலக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வருகிறது.
உணவை பரிசோதித்து உண்ணுங்கள் என்றபோது,

எனது இறைவனின் நியதி எதுவோ அதன்படி நடக்கட்டும் என்றார்கள்.

இறுதியில் எதிர்பார்த்தது
போலவே அவர்களின் உணவில் எப்படியோ விஷத்தை கலந்து விட்டனர்.

அவர்கள் உணவை உண்டபோது அதனை புரிந்தும் கொண்டார்கள்.
மனைவியும்,
பணியாளரும்
உடனடியாக வைத்தியரை வரவழைத்து மாற்று மருந்து சாப்பிடுங்கள்
என்று கூறியதை ஏற்க மறுத்து, மனைவியை தவிர எல்லோரையும்
வெளியே போகச் சொன்னார்கள்.

இறுதியில் திருமறையின் சில ஆயத்துகளை ஓதினார்கள்.

மனிதர்கள் அல்லாத
ஏதோ ஒரு அற்புதமானவர்களை
காண்கிறேன் என மனைவியிடம் கூறினார்கள்.

திருமறையின் வரிகளை ஓதிக்கொண்டே
சாதாரண தரைவிரிப்பில்..
பல லட்சம் சதுர கி.மீ
பரப்பளவுள்ள சாம்ராஜ்யத்தின்
பேரரசர் தனது இறைவனை சந்திக்க‌
புறப்பட்டார்கள்.
மரணம் அவர்களை தழுவியது.

உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) ஆட்சியைப் போலவே
யஜீத் இப்னு அப்துல் மலீக் அவர்களின் ஆட்சி நாற்பது நாட்கள் நடந்தது.

பிறகு நடந்தது..பல விபரீதங்கள்.

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி-1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு -33

(கி.பி 661-750)

யஜீது இப்னு அப்துல் மலீக் அவர்களின் ஆட்சியும் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்)
அவர்களுடைய ஆட்சி போலவே நீதியாக இருக்க உமைய்யா அரச குடும்பத்தினருக்கு
கடும் கோபம் ஏற்பட்டது.

தங்களின் பறிக்கப்பட்ட சலுகைகளை, இப்போதும் பெற முடியாதே என எண்ணி அரசரை வீழ்த்த சூழ்ச்சி செய்தார்கள்.

நாற்பது பேர் கொண்ட ஒரு குழு
பெரிய சூஃபிகளின் கோலங்களில் மன்னரை சந்திக்க வந்தது.

அந்தப்போலிகள் மன்னரை சந்தித்து
மன்னர் என்பவர் சாதாரணமானவர் அல்ல.அவருக்கு எல்லோருக்குமான சட்டங்கள் பொருந்தாது.

மன்னர்கள் உலகில் எல்லாவகையான சுகங்களையும் அனுபவிக்க பிறந்தவர்கள் என பலவாறாக மன்னரை புகழ்ந்து மூளைச்சலவை செய்து மன்னரை
தீய பழக்கங்களை நோக்கி இழுத்துப்போயினர்.

மன்னர் குடிகாரராக
மாறிப்போனார்.
அரசவையில் பெண்கள் அழைக்கப்பட்டு நாட்டியம் பாட்டு கொண்டாட்டம் என
அரசவை அலங்கோலமானது.

அரசவை அலங்கரிக்கப்பட்டு,
ஒரு பொழுதுபோக்கு கூடம் போல செயல்பட்டது.

மன்னரை சுற்றி பெண்களே இருந்தனர்.
குடியும் கும்மாளமுமாக
மன்னர் பொழுதைக் கழித்தார்.

அரசின் முழு நிர்வாகமும் சீர்குலைந்தது.
இதனை சரியாகப் பயன்படுத்தி கொண்ட உமைய்யா அரசகுடும்பத்தினர்,
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து
சலுகைகளை அனுபவிக்க தொடங்கினர்.

மக்களின் மீது அராஜகங்களை புரிந்தனர்.
வரிவசூல், மேலும் மிரட்டி பணம் பறித்தல்,
போன்ற கொடுமைகள் அரங்கேறின.

மன்னரின் உடல்நலம் அதிக போதையால்
கடுமையாக பாதிக்கப்பட்டது.

அரசவை வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும் தனது 38 ஆவது வயதிலேயே
அவரின் அலங்கோலமான
ஐந்துவருட ஆட்சியோடு மரணம் அவரை தின்றது.

அடுத்த ஆட்சியாளராக ஹிஸாம் இப்னு அப்துல் மலீக் பொறுப்பேற்றார்.

மிகவும் பொறுமையான மன்னர்.அரசவையில்
ஒரு அமைச்சரை கடிந்து பேசிவிட்டு, அவரிடம் பலமுறை மன்னிப்பு கேட்ட பொறுமைசாலி.

குராசான் பகுதிக்கு “அஸ்ரஸ்” என்பவரை
கவர்னராக நியமித்தார் மன்னர் ஹிஸாம்.

அவரை இஸ்லாமிய பிரச்சாரமும் செய்ய மன்னர் பணித்தார்.
அஸ்ரஸ் வரிகளை கடுமையான முறையில் வசூல் செய்தார்.

முஸ்லீம்கள் ஜிஸியா வரி செலுத்த தேவையில்லை என்பதால் சிலரும்,
இஸ்லாத்தின் போதனைகளால் வசீகரக்கப்பட்டு பலரும், முஸ்லீம்களாக மாறினர்.

ஏராளமான மக்கள் முஸ்லீம்களாக மாறியதால், வரிவிலக்கு இருந்ததால், கடுமையான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது.

ஆகவே கவர்னர் அஸ்ரஸ் போட்ட ஒரு உத்தரவு முஸ்லீம்களாக மாறியவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நிறையப் பேர் மீண்டும் காஃபிர்களாக மதம் மாறத்துவங்கினர்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!