மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வலையபட்டியைச் சேர்ந்த குமார் மகன் யுகேஷ் (21). இவர் உசிலமபட்டி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். போததம்பட்டியைச் சேர்ந்த இந்திரா விதவையான இவருக்கும் யுகேஷ்க்கும் காதல் மலர்ந்தது. இந்திராவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் யுகேஷை திருமணம் செய்து கொண்டார் இந்திரா (31). ஆனால் இந்திராவின் முதல் கணவரின் சகோதரர் ராம்பிரபு உசிலம்பட்டி போலீசில் இந்திராவும் 2 குழந்தைகளும் காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்த நிலையில் யுகேஷை கொடூரமான முறையில் கொலை செய்த மர்ம நபர்கள் யுகேசின் வீட்டின் முன்பு தூக்கிவீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்த செக்காணூரணி போலீசார் சம்பவ இடததிற்கு சென்று யுகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு யுகேசின் தந்தை குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் கொலை செய்த மர்ம நபர்களை தேடிவருகின்றன.இந்த சம்பவம் அந்த பகுதியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.